search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து கடைகள் அடைப்பு"

    வணிகர்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்று விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தரநீர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-

    வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றுவது இல்லை. அந்நிய நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் ஈடுபடுகிறது. இதை தடுக்க வேண்டும்.

    நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளில் 5 முறை மத்திய மந்திரிகளை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், தமிழக அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுத்தேன். எங்கள் மனுக்கள் என்ன ஆனது? பத்திரமாக வைத்து இருக்கிறீர்களா? அல்லது குப்பை தொட்டியில் போட்டு விட்டீர்களா?

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. வணிகர்களின் ஓட்டு உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திடமா ஓட்டு கேட்பீர்கள்?

    தமிழ்நாட்டில் ஒரு கோடி வணிக குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பணத்துக்கு ஓட்டுகளை விற்பதில்லை. அதற்கு வியாபாரிகள் துணை போகமாட்டார்கள். எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்று கேட்கிறோம். நாங்கள் எந்த கால கட்டத்திலும் அரசியல் பக்கம் செல்ல மாட்டோம்.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் 23-ந்தேதி உண்ணாவிரதம் இருப்போம். அடுத்த கட்டமாக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். அதன் பிறகும் அரசு அழைத்து பேசாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் ஜோதிலிங்கம், மோகன், ஜெயபால், அமல்ராஜ், ஆதிகுருசாமி, சாமுவேல், ரவி, நிர்வாகிகள் வி.பி.மணி, ராஜ்குமார், அம்பத்தூர் ஹாஜிமுகமது, ஆர்.கே.எம்.துரைராஜன், அய்யார் பவன் அய்யாதுரை, தங்கதுரை, மனோகரன், ராஜேந்திரன், வேலுசாமி, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், பால்ஆசீர், எட்வர்டு, வில்சன், முகமது செரீப், தேசிகன், சின்னவன், அடையாறு துரை, பாஸ்கர், கே.ஏ.மாரியப்பன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இதுபோல் 12 மண்டலங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகளை அடைத்து இன்று போராட்டம் நடத்தினார்கள். நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டன.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1200 மருந்து கடைகள் மற்றும் மொத்த விற்பனை மருந்தகங்கள் உள்ளன. இதில் நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன.

    பிரபல பெரிய ஆஸ்பத்திரிகளின் உள்ளே செயல்படும் மருந்து கடைகளும் பெரும்பாலானவைகள் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்தனர்.

    வெளிநோயாளிகள் மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்க முடியாமல் தவித்தனர். அதுபோல ஏற்கனவே டாக்டர்கள் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டுக்களுக்கும், இன்று மருந்துகள் வழங்கப்படவில்லை. இதனால் பெருமளவு வெளிநோயாளிகள் பரிதவித்தனர்.

    அரசு மருந்தகங்கள், அம்மா மருந்தகங்கள், மத்திய அரசின் குறைந்தவிலை மருந்து கடைகள் போன்றவை இன்று வழக்கம் போல் திறந்து இருந்தன. இதனால் அங்கு இன்று கடும் கூட்டம் அலைமோதியது. நெல்லை மேம்பாலம் அருகே உள்ள கூட்டுறவு பேரங்காடி ‘அம்மா’ மருந்தகத்தில் ஏராளமானவர்கள் வெளியே காத்து நின்று மருந்து மாத்திரைகள் வாங்கி சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 550 க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் அங்கும் வெளி நோயாளிகள் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அம்மா மருந்தகங்கள் அனைத்து பகுதியிலும் திறந்து இருந்தது.

    நாளை அனைத்து மருந்து கடைகளும் வழக்கம் போல் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 800 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.
    திண்டுக்கல்:

    இந்தியா முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு ஊக்குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மருந்து கடை உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்

    தமிழகத்தில் 12 மணி நேரம் மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று மருந்து வணிகர் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. நகர் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல் தேனி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

    ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் 400 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.
    தேனி:

    இந்தியா முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு ஊக்குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மருந்து கடை உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    தமிழகத்தில் 12 மணி நேரம் மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று மருந்து வணிகர் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன. நகர் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

    ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. #MedicalsStrike
    மதுரை:

    ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்து கடை வணிகர்கள் சங்க அமைப்புகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தன. அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் மூடப்பட்டன.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட மருந்து கடை வணிகர் சங்க செயலாளர் மனோகரன் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் உள்ளன. ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம். மேலும் பழங்காநத்தத்தில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்துகிறோம் என்றார்.

    மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மருந்து, மாத்திரைகள் வாங்க மிகவும் சிரமப்பட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 660 மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைகளுடன் இணைந்த கடைகள் திறக்கப்பட்டிருந்தன. #MedicalsStrike
    ×